இது மட்டும் நடந்தால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பாஜகவுடன் இணைத்து விடுவார் - உதயநிதி ஸ்டாலின்

Udhayanidhi Stalin ADMK BJP Edappadi K. Palaniswami
By Karthikraja Nov 17, 2024 09:30 AM GMT
Report

மக்கள் நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் வேறு யார் பெயரை வைப்பது என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் 48 இணையர்களுக்கு திருமண விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்தார். 

udhayanidhi stalin

அதனைத் தொடர்ந்து நிகழ்வில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்த திருமணத்தைப் பொறுத்தவரையில் சுயமரியாதை திருமணம் போன்று நடைபெற்றது. சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரத்தை, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியவர்கள்தான் பெற்று தந்தார்கள். 

ஒரே மேடையில் விவாதிக்க தயார் - எடப்பாடியின் சவாலை ஏற்ற உதயநிதி

ஒரே மேடையில் விவாதிக்க தயார் - எடப்பாடியின் சவாலை ஏற்ற உதயநிதி

திராவிட இயக்கம்

இப்போதெல்லாம் தமிழ்நாடு முழுவதும் இது போன்ற திருமணங்கள் ஏராளமாக நடைபெறுகிறது. இது போன்ற பண்பாட்டு புரட்சியை திராவிட இயக்கம் நடத்திக் கொண்டிருப்பதால்தான், ஆரிய இயக்கத்திற்கும் ஆரிய அடிமைகளுக்கும் அடங்காத வயிற்றெரிச்சல், கோபம் வருகிறது. 

udhayanidhi stalin

மக்கள் நமது திட்டங்களை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதை பார்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கோபம் வருகிறது. குறிப்பாக அவர் ஏன் எல்லா திட்டங்களுக்கும் கலைஞர் பெயர் வைக்கிறீர்கள் என்று கேட்கிறார். தனது 96வது வயது வரை தமிழ்நாட்டுக்காக, தமிழ்நாட்டு மக்களுக்காக ஓயாது உழைத்த கலைஞர் பெயரை மக்கள் நல திட்டங்களுக்கு சூட்டாமல் வேறு யார் பெயரை வைப்பது?

பாஜக கூட்டணி

கூவத்தூரில் ஊர்ந்து போன கரப்பான் பூச்சி பெயரை வைக்கலாமா? இல்லை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயரை வைத்தாலும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ள மாட்டார். அவருக்கு இப்போது அமித்ஷா, மோடி பெயரை வைக்க வேண்டும்.

3 மாதங்களுக்கு முன் அதிமுக எந்த காலகட்டத்திலும் பாஜக கூட்டணியில் இருக்காது என பேசினார். சமீபத்தில் சேலத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்த மறுநாளே, "கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் பேசிக் கொள்ளலாம்" எனச் சொல்லிவிட்டார். இன்னும் ஒரு வருமானவரித்துறை சோதனை நடந்தால் அதிமுகவை பாஜகவுடன் இணைத்தாலும் இணைத்து விடுவார். அந்தளவிற்குத்தான் இன்றைக்கு அதிமுகவின் நிலைமை இருக்கிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெற வேண்டும் என தலைவர் உத்தரவிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்பாக ஒவ்வொரு வாக்காளரிடமும் நமது திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும்" என பேசினார்.