திமுக அரசு எப்போதும் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் - உதயநிதி

Udhayanidhi Stalin DMK
By Karthikraja Aug 04, 2024 03:18 AM GMT
Report

திமுக அரசு எப்போதும் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பாக மட்டும் தான் இருக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

வருவாய்த் துறை மாநாடு

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தின் 16 ஆம் ஆண்டு வைர விழா மாநாடு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் அணைத்து மாவட்டங்களிலிருந்தும் வருவாய் துறையின் முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

varuvaithurai

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

உதயநிதி

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி, இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு முதலில் அனைவருக்கும் நன்றி. அரசு மற்றும் மக்களுக்கு பெரிதும் பக்கபலமாய் உள்ள வருவாய்த்துறையின் வைரவிழா நிகழ்ச்சிக்கு என்னுடைய வாழ்த்துகள். 

udhyanidhi stalin

ஒரு அமைப்பாக இருந்தால் மட்டுமே குறிக்கோளை அடைய முடியும். அந்த வகையில் வருவாய்த்துறை சங்கம் வைர விழா கொண்டாடுவது அவர்களது அமைப்பின் வலுவை உயிர்த்துகிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுடைய பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும் என மக்களுடன் முதல்வர் போன்ற எண்ணற்ற திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

திமுக அரசு

அரசின் எல்லா துறைகளிலும் தாய் துறை என்றால் அது வருவாய்த்துறைதான். அரசுக்கும் பொது மக்களுக்கும் பாலமாக இருப்பது வருவாய்த்துறை அலுவலர்களாகிய நீங்கள்தான். ஏழை எளிய மக்கள் நலன், விவசாய நலன், குழந்தைகள் நலன், தொழிலாளர் நலன், மகளிர் நலன் போன்று எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அந்த திட்டங்களை எல்லாம் வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டுமானால் அதற்கு வருவாய்த்துறை ஒத்துழைப்பு இருந்தால் மட்டும்தான் செய்ய முடியும். எனவே உங்களின் ஒத்துழைப்பு இந்த அரசுக்கு மிகவும் தேவையானது.

அரசு அலுவலர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் தான் பொதுமக்களின் வாழ்க்கையில் அது எதிரொலிக்கும் என்பதில் திமுக அரசு கவனமாக உள்ளது. ஆகவே, திமுக அரசானது எப்போதும் அரசு ஊழியர்களுக்கும் மக்களுக்கும், பக்கபலமாக இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை உங்கள் அனைத்து கோரிக்கைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி கொடுப்பார் என பேசினார்.