முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற உதயநிதி ஸ்டாலின்

Udhayanidhi Stalin M K Stalin DMK
By Thahir Nov 23, 2022 02:27 PM GMT
Report

2வது முறையாக திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முதலமைச்சரி்டம் வாழ்த்து பெற்ற உதயநிதி 

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இதே பதவியில் நியமிக்கப்பட்டார்.

பின்னர் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Udhayanidhi Stalin personally met and congratulated the Chief Minister

இந்த நிலையில் மீண்டும் திமுக இளைஞரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்த பெற்றார்.