சீறிய கொம்பன் காளை…அந்தரத்தில் ஏறிய வீரர்கள் – விஜயபாஸ்கர் காளைக்கு தங்க நாணயம் கொடுத்த உதயநிதி
அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு விழாவில் காளையர்களை கதறவிட்டு தங்க நாணயங்களை பரிசாக தட்டிச் சென்றது முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் காளைகள்.
தங்க நாணயம் வென்ற கொம்பன் காளை
உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் 1000 காளைகள் மற்றும் 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த போட்டியின் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,அன்பில் மகேஷ் மற்றும் மூர்த்தி உள்ளிட்டோரும் நடிகர் சூரி ஆகியோரும் கலந்து கொண்டனர். போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இந்த போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைகள் பங்கேற்றது. காளைகள் வீரர்களின் கையில் பிடிபடாமல் பரிசுகளை தட்டிச் சென்றது.
விஜயபாஸ்கரின் கொம்பன் காளைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்க நாணயங்களை பரிசாக வழங்கினார்.