உதயநிதி டாடிக்கு குக்கூ குக்கூ: அமமுக வெளியிட்ட ‘எஞ்சாயி என் சாமி’ ட்ரெண்ட்

politics song dance enjoyenjami
By Jon Mar 27, 2021 11:37 AM GMT
Report

தெருக்குரல் அறிவு எழுதி பாடகி தீ குரலில் வெளியான 'எஞ்சாயி என் சாமி' என்ற பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. பட்டிதொட்டியெங்கும் இந்த பாடலை மக்களை பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

நாடெங்கிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த பாடலை அமமுகவினர், தங்களது நடைக்கு ஏற்றாற்போல மாற்றி பிரச்சாரத்துக்கு பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். எல்லா கட்சி பற்றியும் அந்த பாடலில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக அரசியல் தலைவர்கள் யாரையும் அதில் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக அதில் இடம்பெற்றிருக்கும் ஓட்டுக்கு பணம், மது வாசகங்கள் பேசு பொருளாகி இருக்கிறது.

அனைத்து கட்சிகளும் தற்போது தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருக்கின்றன. 4ம் தேதி வரை மட்டுமே பிரச்சாரம் செய்ய முடியும். இதனால், அரசியல் கட்சிகள் புது புது வித்தைகளை கையாண்டு வருகிறார்கள். அமமுக பிரச்சார பாடல்களை கேட்ட நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.