சட்டமன்றத்தில் விஜய் டான்ஸ் மட்டும்தான் ஆடவில்லை- உதயநிதி ஸ்டாலின்

Vijay Chief Minister of Tamil Nadu TVK
By Yashini Jun 28, 2026 11:31 AM GMT
Report

தஞ்சாவூர் ஒரத்த நாட்டில் தஞ்சை மத்திய மாவட்ட அயலக அணி தலைவர் க. முத்து தமிழ்செல்வன் இல்ல திருமண விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அப்போது, முதலமைச்சர் விஜய் மற்றும் ஆளுங்கட்சி குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது..,

தமிழக சட்டமன்றத்தின் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. சட்டமன்றத்தை சினிமா சூட்டிங் போல் ஆளுங்கட்சி மாற்றியிருக்கிறது.

முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் டான்ஸ் மட்டும்தான் ஆடவில்லை, அடுத்த சட்டமன்றத்தில் டான்ஸ் ஆடுவார் என்று நினைக்கின்றேன்.

சட்டமன்றத்தில் நாம் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் எந்த பதிலும் சொல்லவில்லை. இந்த பேரிடரில் இருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டியது நமது பொறுப்பு.

சட்டமன்றத்தில் விஜய் டான்ஸ் மட்டும்தான் ஆடவில்லை- உதயநிதி ஸ்டாலின் | Udhayanidhi Criticizes About Chief Minister Vijay

இந்த ஆட்சியின் கொடுமைகளை இளைஞர்கள் தட்டி கேட்டு வருகின்றனர். அப்படி தட்டி கேட்கும் இளைஞர்களை சோபா மாடல் அரசு கைது செய்கிறது.

இது போன்ற அடக்குமுறைகளை எதிர் கொள்ள கழகத்திற்கு வழக்கறிஞர்கள் தேவை என்று கூறியுள்ளார்.

மேலும், நம்மை கிண்டல் செய்வதாக நினைத்து முதலமைச்சவர் அவரை அவரே வெளிப்படுத்திக்கொள்கிறார்.

திமுக தூண்டுதலால் விவசாயிகள் போராடுவதாக அவர்களை முதலமைச்சர் கொச்சைப்படுத்தினார்.

மேலும், எதற்கெடுத்தாலும் திமுக தான் காரணம் என்ற ஒரு ரெடிமேட் பதிலை முதல்வர் விஜய் வைத்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.