தவெக அரசின் இரட்டை வேடம்: உதயநிதி ஸ்டாலின்

NEET TVK
By Fathima Jul 22, 2026 03:20 AM GMT
Report

நீட் விஷயத்தில் ஆளும்கட்சியான தவெக இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டியுள்ளார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

நீட் முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, இந்தியா முழுவதும் பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் போராட்டம் நடத்திய அமைப்பினரை போலிசார் கைது செய்தனர்.

தவெக அரசின் இரட்டை வேடம்: உதயநிதி ஸ்டாலின் | Udhayanidhi Condemns Tvk Neet Issue

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் நீட் தேர்வுக்கு எதிராக போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும் சோபா மாடல் அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் போராடுவோரை கைது செய்வது என்பது நீட் விஷயத்தில் ஆளும்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.

மத்திய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தை தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, சோபா மாடல் அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். 

தவெக அரசின் இரட்டை வேடம்: உதயநிதி ஸ்டாலின் | Udhayanidhi Condemns Tvk Neet Issue