மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக்காவல்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

Udhayanidhi Stalin Tamil nadu C Joseph Vijay
By Vinoja Oct 12, 2026 07:28 AM GMT
Report

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த பன்னோக்கு மருத்துவப் பணியாளர்களை, ஆங்காங்கே வீட்டுக்காவலில் வைத்துள்ளதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் பதிவு 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மருத்துவப் பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பே அவர்களை வீட்டுக்காவலில் வைப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக்காவல்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்! | Udhayanidhi Condemns Medical Workers House Arrest

மேலும், விவசாயிகள், மாணவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஜனநாயக வழியில் போராடும் பல்வேறு தரப்பினரையும் நேரில் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தாமல், அடக்குமுறையை ஏவுவது தான் மாற்றமா என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மருத்துவப் பணிகளின் முதுகெலும்பாக விளங்கும் பன்னோக்கு மருத்துவப் பணியாளர்களை உடனடியாக விடுவித்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.