கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்? - முதல்வர் விஜய்க்கு உதயநிதி கேள்வி

Udhayanidhi Stalin Vijay
By Karthikraja Aug 14, 2026 01:12 PM GMT
Report

மீனவர் பிரச்சினையில், கடிதம் எழுதினால் மட்டும் போதுமா உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா? என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நம்மை பார்த்து சொன்னவர்கள், இப்போது கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?

இலங்கை அரசால் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ள 49 இந்திய மீனவர்களை மீட்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், வெளியுறவுத்துறை அமைச்சருக்கு நேற்று கடிதம் எழுதினார். 

கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்? - முதல்வர் விஜய்க்கு உதயநிதி கேள்வி | Udhayanidhi Condemns Cm Vijay For Letter To Moe

முதல்வர் விஜய் கடிதம் எழுதியது குறித்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது.

இந்த பிரச்சினை தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இந்த அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

மீனவர் பிரச்சினையில், ‘மானே - தேனே - பொன்மானே என்று கடிதம் எழுதினால் மட்டும் போதுமா - உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?’ என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நம்மை பார்த்து சொன்னவர்கள், இப்போது கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?

ஆட்சிக்கு முன் - ஆட்சிக்குப் பின் என ஒவ்வொரு விஷயத்திலும் இரட்டை வேடம் போடுவது போல, மீனவர் பிரச்சினையிலும் இந்த #SofaModel அரசு ஏமாற்று வேலைகளில் ஈடுபடக்கூடாது. 

இவர்கள் சொன்ன அந்த உணர்வுப்பூர்வமான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.