''உதயநிதிக்கு ஓட்டுப் போடுங்கள்'' :அமித்ஷா அதிரடி பேச்சு
அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்த அமித்ஷா, தமிழகத்திற்கு வளர்ச்சி வேண்டும் என்றால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் . உதயநிதிக்கு வளர்ச்சி வேண்டும் என்றால் திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று பேசினார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியின் பாஜக சட்டமன்ற வேட்பாளரை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அமித்ஷா அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி வேண்டுமா? இல்லை உதயநிதிக்கு மட்டும் வளர்ச்சி வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அமித்ஷா உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரே ஒரு ஆசை உள்ளது ,அது தனது தந்தை மு.க.ஸ்டாலினை எப்படியாவது முதல்வராக்கிப் பார்ப்பது தான் என தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் பாஜக ,அதிமுக, பாமக கூட்டணியைத் தவிர வேறு யாராலும் வளர்ச்சியை தர முடியாது என்றும் பேசினார்.