ஏ.ஆர்.ரஹ்மான் விவகாரத்தில் காரணம் யார்? - அமைச்சர் உதயநிதி அதிரடி..!!
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை உதயநிதி ஸ்டாலின் சென்னை திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் துவங்கி வைத்தார்.
விசாரணை நடத்தப்படும்
அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏஆர் ரகுமான் விவகாரத்தில், அதிக கூட்டம் வந்ததன் காரணமாக இந்த இடைஞ்சல்கள் நடந்துள்ளதாக குறிப்பிட்டு இது போன்ற நிகழ்ச்சிகள் முன்னரே நடந்துள்ளது என்றும் இனிமேல் இது போன்ற நிகழ்வுகள் நடக்கலாம் பார்த்து கொள்ள வேண்டுமென கூறினார்.
இது குறித்து சிலர் ஏஆர் ரகுமானுக்கு எதிராக கருத்துக்கள் கூறி வரும் நிலையில், சிலர் எதாவது காரணம் கிடைக்காதா என்றும் காத்திருப்பார்கள் என்று கூறி, எந்த காரணமாக இந்த பிரச்சனைகள் ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
அதனை குறித்து பேசுங்கள்
தொடர்ந்து சனாதன குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, அதனை குறித்து பேசுவதை நிறுத்துங்கள் என் கேட்டுக்கொண்டு, தற்போது மணிப்பூர் கலவரமும், CAG அறிக்கையின் ஏழரை லட்சம் கோடி ஊழலை குறித்து பேசுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தவது குறித்தே தற்போது பேசவேண்டும் என கேட்டுக்கொண்ட உதயநிதி, தேர்தல் கூட்டணி குறித்து தலைவரே முடிவு செய்வார் என கூறினார்.
ஒரே நாடு ஒரே தேர்தலில் எடப்பாடி பழனிசாமி கூறுவது ஒரே தேர்தலாக இருந்தால் ஒரு நாளில் அனைத்து தோல்வியும் முடிந்து விடும் என்ற காரணத்தால் அதனை ஆதரிப்பதாக சாடினார். அவ்வாறு ஒரு நாடு ஒரு தேர்தல் வைக்கப்பட்டாலும் அதனை எதிர்கொள்ள தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார்.