கொடநாடு வழக்கு - இபிஎஸ் தொடர்ந்து வழக்கு - அமைச்சர் உதயநிதி பதில் மனு..!

Udhayanidhi Stalin ADMK DMK Kodanad Case Edappadi K. Palaniswami
By Karthick Jan 23, 2024 05:54 AM GMT
Report

தன்னை பற்றி அவதூறாக பேச தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த மனுவில், அமைச்சர் உதயநிதி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இபிஎஸ் வழக்கு

ரூ. 1.10 கோடி ரூபாய் இழப்பீடு கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னை குறித்து அவதூறு கருத்துக்களை பரப்புவதற்கு அவரை தடை கோரியிருந்தார்.

udhay-response-in-eps-defamation-case-in-madras-hc

முன்னதாக, கொடநாடு வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக சனாதனத்தை எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சென்னை உயர் நீதிமன்றம் பதில் கேட்டிருந்தது.

ஆமாம் சாமி போடும் அடிமைகளை - விரட்டுவோம்..அமைச்சர் உதயநிதி

ஆமாம் சாமி போடும் அடிமைகளை - விரட்டுவோம்..அமைச்சர் உதயநிதி

உதயநிதி பதில் மனு

அதில், தற்போது உதயநிதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், கொடநாடு சம்பவத்தின் போது ஈபிஎஸ் முதல்வராக இருந்தார் என்பதால் பொது ஊழியராக அவரது செயல்பாடு குறித்து அறிக்கை வெளியிட்டேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

udhay-response-in-eps-defamation-case-in-madras-hc

கொடநாடு வழக்குக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என எடப்பாடி பழனிசாமி கூற முடியாது என்றும் அமைச்சர் உதயநிதி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. பதில் மனுவுக்கு விளக்கமளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து விசாரணை பிப்ரவரி 26ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.