இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் - உதயநிதி ட்வீட்

Udhayanidhi Stalin M K Stalin DMK Election
By Karthick Jan 27, 2024 01:26 PM GMT
Report

வரும் நாடாளுமன்ற தேர்தல் இந்திய ஒன்றியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிற தேர்தல் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதயநிதி பதிவு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய ஒன்றியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை -ஒருங்கிணைப்புக்குழு சார்பிலான ஆலோசனைக் கூட்டங்கள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகின்றன.

udhay-post-about-dmk-party-election-meeting

இதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த பொறுப்பு அமைச்சர் , மாவட்ட கழகச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் செயலாளர்கள், மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் இன்று தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டோம்.

பாசிஸ்ட்டுகளை விரட்ட

தொகுதி நிலவரம் - தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் - கழக அரசின் திட்டங்களின் நிலை உள்ளிட்டக் கருத்துக்களை கேட்டறிந்தோம். 

udhay-post-about-dmk-party-election-meeting

வெறுப்பையும், வேற்றுமையையும் விதைக்கும் பாசிஸ்ட்டுகளை விரட்ட,#INDIA கூட்டணியின் வெற்றிக்கு களத்தில் அயராது உழைப்போம் என கேட்டுக் கொண்டோம் என பதிவிட்டுள்ளார்.