தன்னிடம் வழங்கப்பட்ட நிவாரண நிதியை முதல்வரிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்..!

cm udhay mla money give
By Anupriyamkumaresan Jun 02, 2021 10:48 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

கொரோனா நிவாரண நிதிக்காக பொதுமக்கள், நிறுவனங்கள் சார்பாக வழங்கப்பட்ட நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உதயநிதி ஸ்டாலின் ஒப்படைத்தார். நாடு முழுவதும் கொரோனா பரவலால் அஞ்சி நடுங்கி வருகிறது. இந்த நிலையில், கொரோனாவை எதிர்த்து போராட முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி திரட்டி வருகிறார். அந்த வகையில் பொதுமக்கள், நிறுவனங்கள் என ஏராளமானோர் தங்களால் இயன்ற உதவிகளை நிதியாக அளித்து வருகின்றனர். அதன் படி, சில பொதுமக்கள், நிறுவனங்கள் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினிடம் நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர். அந்த நிதிகளை எல்லாம் திரட்டி கையில் வரப்பட்ட 54 லட்சத்து 11 ஆயிரம் ரூபாயையும் உதயநிதி ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஒப்படைத்தார்.

தன்னிடம் வழங்கப்பட்ட நிவாரண நிதியை முதல்வரிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்..! | Udhay Give Money To Cm