நான் அவர்களின் மறு உருவம், எந்த சோதனைக்கும் அஞ்சமாட்டோம் - உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

Udhayanidhi Stalin DMK BJP
By Vinothini Jun 22, 2023 11:12 AM GMT
Report

 அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பாஜக குறித்து பேசியுள்ளார்.

நிகழ்ச்சி

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு தனியார் கல்லூரி மைதானத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

udhanidhi-speaks-about-bjp

இதில் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில் அவர் செந்தில் பாலாஜி கைது குறித்து பேசியிருந்தார்.

பேட்டி

இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில், "பா.ஜனதாவின் சார்பு அணிகளாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை செயல்படுகின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் வீடுகளில் சோதனை நடந்தது.

udhanidhi-speaks-about-bjp

ஆனால், முடிவில் யாரையும் பா.ஜனதா அரசு கைது செய்யவில்லை. பா.ஜனதா எத்தனை சோதனைகள் நடத்தினாலும் தி.மு.க.வின் கிளை செயலாளர் கூட பயப்படமாட்டான். பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் மறுஉருவமாக செயல்படுவேன்" என்று கூறியுள்ளார்.