மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு.! உறுதிபடுத்திய உத்தவ் தாக்கரே
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக 60,000க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் மீண்டும் ஊரடங்கு வருமா என்பது பற்றி எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இந்தியாவிலே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. தற்போது 50% அதிகமான கொரோனா பாதிப்புகள் மகாராஷ்டிராவில் பதிவாகி வருகின்றன.
இந்த கொரோனா பரவலும் இறப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இன்னொரு ஊரடங்கிற்கு தயாராகுமாறு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா கட்டுபாடுகளை யாரும் பின்பற்றுவதில்லை என்றும் பரவலை குறைக்க ஊரடங்கு மட்டுமே வழி என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இதனால் மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.