‘‘தேவைபட்டால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்"- உத்தவ் தாக்ரே எச்சரிக்கை

curfew india maharashtra Thackeray
By Jon Apr 03, 2021 01:32 PM GMT
Report

மாகராஷ்டிராவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரோ எச்சரித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் புதியதாக 47,827 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 24.67 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

3.67 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.இந்திய அளாவில் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது மாகராஷ்டிரா. இந்த சூழலில், தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தாக்ரே எச்சரித்துள்ளார். மேலும், புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,63,396 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.