சாவர்க்கரை தப்பா பேசினா கூட்டணி கலையும் : ராகுல்காந்திக்கு எச்சரிக்கை

Indian National Congress Rahul Gandhi
By Irumporai Mar 27, 2023 05:09 AM GMT
Report

காங்கிரஸ் முன்னாள் எம்பி சாவர்க்கர் குறித்து சர்ச்சையாக பேசினால் கூட்டணி பிளவுப்படும் என்று உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

 ராகுல் கைது

மோடி குறித்து அவதூறாக பேசியதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவரான எம்.பி ராகுல்காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதை தொடர்ந்து இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தில் ராகுல்காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் கூறப்பட்டது.

சாவர்க்கரை தப்பா பேசினா கூட்டணி கலையும் : ராகுல்காந்திக்கு எச்சரிக்கை | Uddhav Thackaray Warn Rahul Gandhi

இதற்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தங்களின் எதிர்ப்பினை தெரிவித்த நிலையில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல. ராகுல்காந்தி. காந்தி மன்னிப்பு கேட்க மாட்டான் என பேசியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். 

உத்தவ் தாக்கரே எதிப்பு

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா கூட்டணி தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ராகுலின் சாவர்க்கர் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பேசியுள்ள உத்தவ் தாக்கரே அந்தமான் சிறையில் சாவர்க்கர் 14 ஆண்டுகள் பல கொடுமைகளை அனுபவித்தார். அதுவும் ஒருவிதமான தியாகம்தான். சாவர்க்கர் எங்கள் கடவுள். எங்கள் கடவுளை அவமரியாதை செய்வதை நாங்கள் சகித்துக் கொள்ள முடியாது என கூறியுள்ளார்.