ரொம்ப நன்றி தம்பி எனது ரசிகராக மாறியமைக்கு : உதயநிதி குறித்து கமல்ஹாசன் ட்வீட்

Kamal Haasan Vikram Movie
By Irumporai Jun 02, 2022 10:35 AM GMT
Report

உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி நாளை வெளியாக இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதில் சூர்யாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் விக்ரம் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'விக்ரம் படம் நன்றாக உள்ளது. இந்த அனுபவத்தை கொடுத்த கமல் சார், லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, பகத் பாசில், அனிருத் ஆகியோருக்கு நன்றி.

இந்த படம் வெற்றி பெறுவது உறுதி' என்று பதிவிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்துள்ள கமல்ஹாசன்,

" அன்பு தம்பி உதயநிதி ஸ்டாலின், உங்களின் முதல் விமர்சனத்திற்கு நன்றி. நீங்கள் உங்களை ஒரு ரசிகராக அறிவித்து கொண்டீர்கள். உங்களின் வாழ்த்து என் பிற அனைத்து சகோதரர்களை உற்சாகப்படுத்தும்" என பதிவிட்டுள்ளார்.