பம்பரமாய சுழன்று ..சேப்பாக்கத்தில் ஒரே நாளில் அசர வைத்த உதயநிதி !

tamilnadu dmk chepauk udaynithi
By Irumporai May 17, 2021 01:38 PM GMT
Report

இந்த கொரோனா சூழலில், எம்எல்ஏவாக பதவியேற்றது முதல் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்குள் பம்பரமாக செயல்பட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

அரசியலை தாண்டி பார்க்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கொய்யாத்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் நடைபெற்ற குப்பை அகற்றும் பணி உள்ளிட்டவற்றை தொடர்ந்து நான்காவது நாளயாக உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அந்த பணியை விரைந்து முடித்து வைத்துள்ளார்.

அதே போல் சேப்பாக்கம் தொகுதிக்கு உள்பட , முத்தையா தெருவில் கொரோனா தடுப்பு பணிகளை உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அங்கு மோசமான நிலையிலிருந்த பொது கழிப்பிடத்தை சரிசெய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கூறினார்கள். அதை நேரில் சென்று பார்த்த உதயநிதி ஸ்டாலின், அங்கேயே மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து, அந்த கழிப்பிடத்தை உடனே சீரமைத்துத் தருமாறு வலியுறுத்தினார்.

கடந்த ஒரு வாரமாக உதயநிதி என்னென்ன பிரச்சனைகளை சரி செய்தார் என்பது அவரது ட்வீட்டர் பதிவினை பார்த்தாலே தெளிவாக தெரியும்.

மேலும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியிலுள்ள கஸ்துரிபா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு செய்த உதயநிதி ஆம்புலன்ஸ் வசதி வேண்டுமென கோரிக்கை வைக்கவே உடனே மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரை தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் வசதி செய்ததர கோரிக்கை வைத்துள்ளார். 

இந்த கொரோனா காலகட்டத்தில் பமபரமாய் சுழன்று செயல்படும்  உதயநிதி ஸ்டாலினை பலரும் பாராட்டி வருகிறார்கள்.