திமுக சகாப்தம் முடிகிறது.. உதயநிதி ஒரு கத்துக்குட்டி : ஜெயக்குமார் விமர்சனம்
அரசியலில் உதயநிதி ஒரு கத்துக்குட்டி. ஸ்டாலின் தனது கனவை நினைவாக்கிக் உள்ளதாக என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்
குடும்ப கட்சி திமுக :
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

உதயநிதி கத்துக்குட்டி :
அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார் திமுக என்பது குடும்ப கட்சியாக மாறிவிட்டது. திமுகவில் கட்சிக்காக உழைத்தவர்கள் பலர் உள்ளனர். அரசியலில் உதயநிதி ஒரு கத்துக்குட்டி. ஸ்டாலின் தனது கனவை நினைவாக்கிக் கொண்டுள்ளார்.
உதயநிதி அமைச்சரான பின் தமிழகத்தில் எந்த மாற்றமும் வரப்போவது இல்லை. அறியாப்பிள்ளை விதைத்த பயிர் வீடு வந்து சேராது என்பது போல தான் இருக்கும் என தெரிவித்துள்ளார்.