"AIIMS" தந்தைக்கு ஒற்றை செங்கல்லை பரிசாக கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற பின், தன் தந்தை ஸ்டாலினை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் அவருக்கு செங்கலை கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கடந்த மாதம் 6-ஆம் திகதி நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், அதிமுக, திமுக, மநீம, நாம் தமிழர், அமமுக என ஐந்து முனை போட்டி நிலவுகிறது.
திமுக 160 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் கிள்ளியூர், விளாத்திகுளம், சேப்பாக்கம், வந்தவாசி ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதிமுக கூட்டணி 73 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து AIIMS என எழுதப்பட்ட ஒற்றை செங்கலை தந்தைக்கு கொடுத்து வாழ்த்துகள் பெற்றுக் கொண்டார், இந்த புகைப்படத்தை உதயநிதி டுவிட்டரில் வெளியிட வைரலாகி வருகிறது.