தவறு செய்யும் தவெகவினரைக் கட்டுப்படுத்துங்கள் - முதல்வர் விஜய்க்கு உதயநிதி எச்சரிக்கை!

Udhayanidhi Stalin Tamil nadu Social Media C. Joseph Vijay
By Vinoja Nov 12, 2026 11:51 AM GMT
Report

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் சர்ச்சைக்குரிய குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், புகார் அளிக்க வந்த சாமானியரை துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், சம்பந்தப்பட்ட இரு எம்.எல்.ஏ.க்களையும் தனித்தனியாகச் சந்தித்து எச்சரித்ததாகத் தகவல்கள் வெளியாகின.

தவறு செய்யும் தவெகவினரைக் கட்டுப்படுத்துங்கள் - முதல்வர் விஜய்க்கு உதயநிதி எச்சரிக்கை! | Udayanidhi Stalin Warning Cm Vijay

மேலும், அருள் விக்னேஷ் மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், திமுக இளைஞரணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தனது எக்ஸ் பதிவில், தவறு செய்ததாகக் குற்றம்சாட்டப்படும் கட்சியினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் விஜய் மௌனம் காப்பதாக விமர்சித்துள்ளார்.

மேலும், “முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் தனது கட்சியினரைக் கட்டி வைக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் சக்தி தட்டி வைக்கும்” என எச்சரித்துள்ளார்.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW