இது பதவி இல்லை.. பொறுப்பு - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

Udhayanidhi Stalin M K Stalin Tamil nadu DMK
By Sumathi Dec 14, 2022 04:30 AM GMT
Report

 திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றார். தமிழக அமைச்சராக சென்னை ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவ். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

இது பதவி இல்லை.. பொறுப்பு - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்! | Udayanidhi Stalin Took Over As Minister Tweet

அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உட்பட குடும்ப உறுப்பினர்கள், தமிழக அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும், உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,

 திராவிட மாடல் 

எப்போதும் வழிநடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன்.

பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன் என உறுதியளித்துள்ளார்.