உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர் என்ன தெரியுமா?

udayanidhi stalin
By Fathima Aug 13, 2021 12:40 PM GMT
Report

திமுக எம்எல்ஏ-வும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் அன்பன் என பட்டப்பெயர் சூட்டியுள்ளனர்.

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் உதயநிதி ஸ்டாலின்.

வெற்றி பெற்ற நாளில் இருந்து, தன்னுடைய தொகுதி மக்களை சந்திக்கும் ஸ்டாலின் அவர்களது குறைகளை கேட்டறிந்து சரிசெய்து வருகிறார்.

அதேசமயம் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் உதயநிதிக்கு, “மக்கள் அன்பன்” என பெயர் சூட்டியுள்ளனர்.

பிரபல இயக்குனரான சீனு ராமசாமி, தன்னுடைய புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை உதயநிதி வெளியிடப்போவதாக அறிவித்தார்.

அதில், உதயநிதி பெயருக்கு முன்னாள் ”மக்கள் அன்பன்” என குறிப்பிட்டிருந்தார், இதைப்பார்த்த நெட்டிசன்கள் உதயநிதிக்கு பொருத்தமான பெயர் தான் கமெண்ட் செய்து வருகின்றனர்.