ஆழ்ந்த உறக்க நிலையில் முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு தாங்காது – உதயநிதி கடும் விமர்சனம்

Udhayanidhi Stalin Vijay Tamil nadu TVK
By Vinoja May 29, 2026 03:54 PM GMT
Report

முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த உரக்க நிலைக்கு சென்றுவிட்டதாகவும், தமிழ்நாடு தாங்காது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.

கடலூர் மாவட்டம், வடலூர், கண்ணுதோப்பு என்ற இடத்தில் குவியலாக இருந்த மண்ணில் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.பாதி உடல் மண்ணில் புதைந்த நிலையில், முகம் சிதைந்து அந்த சடலம் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆழ்ந்த உறக்க நிலையில் முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு தாங்காது – உதயநிதி கடும் விமர்சனம் | Udayanidhi Stalin Strongly Criticize Cm Vijay

இந்தச் சம்பவம் மற்றும் இன்று பெண்கள் பாதுகாப்புக்காக தவெக அரசு அறிவித்த சிங்கப் பெண் அதிரடி படை தொடக்க விழா திடீரென தள்ளி வைத்திருப்பதையும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதுஇமிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது.

இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு சந்தேகம் வருது.

இந்த அரசு அமைஞ்சது முதல், கொலை - கொள்ளை - பாலியல் வன்கொடுமைன்னு இப்படி குற்றங்கள் நடக்காத நாளே இல்ல.

தேர்தல் பிரச்சாரத்துல பக்கம் பக்கமா பேப்பர் வச்சு, சட்டம் ஒழுங்கு பத்தி வாய்கிழிய Punch டயலாக் பேசினவர், முதலமைச்சர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு.