தமிழ்நாடு சட்டசபை: உதயநிதி பேசியது என்ன?

Udhayanidhi Stalin
By Fathima Jun 22, 2026 09:10 AM GMT
Report

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று தொடங்கியது.

முதலமைச்சர் விஜய்க்கு எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், புதிய ஆட்சி அமைந்து 40 நாட்களை கடந்துள்ள நிலையில் ஆளுநர் உரையில் தவெக ஆட்சியில் செய்த சாதனை இல்லாதது ஏமாற்றமே, மரபை மீறி தேசியகீதம் இரண்டு முறை பாடப்பட்டுள்ளது.

வழக்கமான மரபை மீறி இருமுறை தேசிய கீதம் பாடியது ஏன் என்று தான் நாங்கள் கேட்கிறோம், ஆளுநர் உரையானது ரீல்ஸ் போடுவதற்கு உதவுமே தவிர உண்மைக்கு உதவாது, எதிர்கட்சி மட்டும் அல்ல, ஆளுங்கட்சி வரிசையிலும் எங்களது வாக்குகள் தான் உள்ளது என தெரிவித்தார்.

மேலும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பட்டியலிட்ட சாதனைகள் ஒரு மாத காலத்தில் நிகழ்ந்ததா?

ஒரே பாட்டில் பணக்காரரான திரைப்படத்தில் மாறுவதை போன்று ஆட்சி பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் சாதனை என கூறுவது பொய் பரப்புரை, திமுகவின் சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டி First Time in Ever History என கூறுகின்றனர் என தெரிவித்தார்.