சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?

Udhayanidhi Stalin
By Fathima May 12, 2026 05:57 AM GMT
Report

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று பேரவை தலைவர் மற்றும் பேரவை துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டனர்.

வாழ்த்துரை நடைபெற்ற போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பெரியார், அண்ணா, கலைஞர், திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என எங்கள் தலைவர்களை வணங்கி உரையை தொடங்குகிறேன்.

முதலில் என்னை வெற்றி பெற வைத்த சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு எனது நன்றி, திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணிக்கு 1.80 கோடி வாக்குகளை அளித்த தமிழக மக்களுக்கு நன்றி.

சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன? | Udayanidhi Stalin Speech In Tn Assembly

வரலாற்று சிறப்பு மிக்க இந்தியாவுக்கே முன்னுதாரணமாக திகழும் தமிழக சட்டப்பேரவையில் தலைவர் மற்றும் துணைத்தலைவராக தெரிவானவர்களுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்.

பேரவை தலைவரான நீங்கள் சிரித்த முகத்திற்கு சொந்தகாரர் என பல சொல்லி கேள்விபட்டுள்ளேன்.

உங்களுக்கு பேரவை மரபுகள், விதிகள் புதிது அல்ல. நீங்கள் நடுநிலையோடு செயல்பட்டு ஆளும்கட்சி, எதிர்கட்சியை அரவணைத்து செல்ல வேண்டும்.

முதலமைச்சர் எங்கள் தலைவர் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றார், அரசியல் நாகரீகம் மிக்க அந்த போக்கு இந்த சட்டப்பேரவையிலும் தொடர வேண்டும்.

சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன? | Udayanidhi Stalin Speech In Tn Assembly

எதிரிகட்சியாக அல்லாமல் ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக நாங்கள் செயல்படுவோம் என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி என்று வரும்போது ஒரே வரிசையில் நின்று செயல்படுவோம், இதை தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள் என தெரிவித்தார்.

மேலும், நான், தமிழக முதலமைச்சர், பேரவை தலைவர் அனைவருமே ஒரே கல்லூரியில் படித்தவர்கள் ஆனால் ஆட்சியில் நாங்கள் தான் சீனியர் என தெரிவித்தார்.

இதை கேட்டதும் முதலமைச்சர் விஜய் சிரித்தபடி இருந்தது குறிப்பிடத்தக்கது.