சட்டப்பேரவை விவாதம்: உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி

Udhayanidhi Stalin Vijay
By Fathima Aug 07, 2026 04:59 AM GMT
Report

தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது.

தமிழக சட்டப்பேரவை கூடியதும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இரங்கல் குறிப்பு வாசித்தார்.

மறைந்த திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ், கவிஞர் மற்றும் எழுத்தாளர் புவியரசு, மறைந்த பின்னணி பாடகி ஜானகி, எழுத்தாளர் பூமணி மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுருளிவேல் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் கேள்வி

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றுகையில், விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கியுள்ளோம்.

முழு தள்ளுபடி என சொல்லிவிட்டு பயிர்க்கடனை அரைகுறையாக தள்ளுபடி செய்வது ஏன்? டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தரவேண்டும், தவெக அரசு அமைந்த பின்னரே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா அரசு தீவிரம் காட்டி வருகிறது, இதுதொடர்பில் அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.