"பாஜக அரசு பழி வாங்க நினைத்தால்..திமுகவின் போர் குணம் வெளிப்படும்" - உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்

Udhayanidhi Stalin DMK BJP Anbil Mahesh Poyyamozhi
By Thahir Oct 08, 2022 03:48 AM GMT
Report

பாஜக அரசு பழி வாங்க நினைத்தால்..திமுகவின் போர் குணம் வெளிப்படும் என உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான் நுால் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நுாலை வெளியிட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டார்.

"பாஜக அரசு பழி வாங்க நினைத்தால்..திமுகவின் போர் குணம் வெளிப்படும்" - உதயநிதி ஸ்டாலின் ஆவேசம் | Udayanidhi Stalin S Obsession

இதில் பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

"பாஜக அரசு பழி வாங்க நினைத்தால்..திமுகவின் போர் குணம் வெளிப்படும்" - உதயநிதி ஸ்டாலின் ஆவேசம் | Udayanidhi Stalin S Obsession

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பாரதி ஜனதா அரசு பழிவாங்க நினைத்தாலோ..தமிழகத்தின் உரிமைகளை பரித்தாலோ...திமுகவின் போர் குணம் வெளிப்படும் என்றார்.