மீண்டும் சர்ச்சையில் ஆளுநர் ரவி - சவால் விடுத்த அமைச்சர் உதயநிதி
ஆளுநர் பொதுக்கூட்டத்தில் இவ்வாறு பேச முடியுமா என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மீண்டும் சர்ச்சையில் ஆளுநர்
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில், குடிமைப்பணி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுடன், தமிழக ஆளுநர் ரவி நேற்று கலந்துரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில் ஸ்டெர்லைட் போராட்டம் மக்களை தூண்டிவிட்டு நடத்தப்பட்டது எனவும், நாட்டின் தேவையை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டி விட்டு மூடிவிட்டனர் எனவும் கூறினார்.
ஆளுநரின் பேச்சுக்க கண்டனம்
மேலும் ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் கிடப்பில் இருப்பதை சுட்டிக்காட்டி கூறிய ஆளுநர், அவை நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என்று கூறினார்.
ஆளுநரின் இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து கூறிய ஆளுநர், வெளிநாட்டு நிதி உதவிகள் மூலம் இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதற்கு இந்த போராட்டம் நடந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
உதயநிதி சவால்
ஆளுநர் ரவியின் இந்த பேச்சிற்கு கண்டனம் தெரிவித்த விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு பேசிய ஆர்.என் .ரவி இந்த பேச்சினை தூத்துகுடியிலோ அல்லது ஒரு பொதுக்கூட்டத்திலோ இவ்வாறு பேச முடியுமா என்று சவால் விடுத்த விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆளுநரின் இந்த பேச்சு வன்மையாக கண்டிக்கத் தக்கது என்று கூறியுள்ளார்