பிரதமரை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி - என்ன காரணம்?

Udhayanidhi Stalin Narendra Modi Delhi
By Sumathi Feb 27, 2023 04:14 AM GMT
Report

பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திக்கவுள்ளார்.

அமைச்சர் உதயநிதி

கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

பிரதமரை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி - என்ன காரணம்? | Udayanidhi Stalin Meets The Prime Minister Modi

ஓடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று அங்கு நடைபெற்ற கபடி போன்ற போட்டிகளை பார்வையிட்டு வந்தார்.

பிரதமருடன் சந்திப்பு

இந்நிலையில், பிரதமர் மோடியை டெல்லியில் நாளை காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திக்கிறார். நாளை காலை 10.30 மணி முதல் 11 மணி வரையில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் மற்றும் கிரிராஜ் சிங் ஆகியோரையும் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவுள்ளார்.