19 முக்கிய அறிவிப்புகள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய அறிவிப்புகள் என்ன ?

Udhayanidhi Stalin
By Irumporai Mar 30, 2023 12:04 PM GMT
Report

சட்டப்பேரவையில் வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் துறை சார்பில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில், ஒரு வட்டாரம் ஒரு உற்பத்தி பொருள் என்ற திட்டம் மூலம் வட்டார அளவில் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் ஒரு பொருளைச் சந்தைப்படுத்த ரூ.5 கோடி மதிப்பில் பொதுச்சேவை மையங்கள் அமைக்கத் திட்டம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்

மகளிர் சுய உதவிக் குழுவிற்கு சுழல் நிதி வழங்கப்படும். நீங்கள் ஒவ்வொருவரும் பிறருக்கு பரிசளிக்கும்போது, மகளிர் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களையே பரிசளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

19 முக்கிய அறிவிப்புகள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய அறிவிப்புகள் என்ன ? | Udayanidhi Stalin 19 Important Announcement

கிராமப்புற இளைஞர்கள் 45 ஆயிரம் பேருக்கு ரூ.145 கோடி செலவில் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி அளிக்கப்படும். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த சமையல் செய்முறைக்கு ரூ.1 கோடியில் பயிற்சி அளிக்கப்படும்.

ஊரக பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட சுய உதவி குழு மகளிருக்கு சமையல் செய்முறை பயிற்சி தரப்படும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வட்டாரத்தில் வானவில் பாலின வள மையம் உருவாக்கப்படும்.

37 வானவில் மையங்கள் அமைக்க நடப்பாண்டு ரூ.1.37 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சமூகத்தில் பின்தங்கிய பெண்கள், வளரிளம் பெண்கள் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

சுய உதவி குழுக்களின் பொருட்களை விற்பனை, காட்சிப்படுத்த ரூ.5 கோடியில் மதி அங்காடிகள் அமைக்கப்படும். 100 முக்கிய சுற்றுலா தலங்களில் மதி அங்காடிகள் அமைக்கப்படும்.

சுய உதவி குழுக்களால் நடத்தப்படும் 7,500 நுண் மற்றும் குறுதொழில் நிறுவனங்கள் ரூ.50 கோடியில் வலுப்படுத்தப்படும் 1,000 கிராம ஊராட்சிகளில் உள்ள மகளிர் புதிய தொழில் தொடங்க ரூ.50 கோடியில் திட்டம் என்றும் மகளிர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் மூலம் சிறுதானிய விதை அலகுகள் ரூ.2 கோடியில் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.