லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஏமாற்றம் - காவலர் நியமனம் குறித்து உதயநிதி கண்டனம்
தமிழ்நாட்டில் காவலர் நியமனத்தை மேலும் ஓராண்டுக்கு தள்ளி வைத்துள்ள அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய அரசு பொறுப்பேற்றது முதல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், காவல்துறைக்கு கூடுதல் பணியாளர்கள் தேவைப்படும் சூழல் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கும்
இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான காவலர் நியமனத்தை தாமதப்படுத்துவது காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் அட்டவணைப்படி, காவலர் தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டுதான் வெளியாகும் எனக் கூறிய அவர், இதனால் சட்டம் ஒழுங்கு நிலைமையும், காவல்துறை பணியில் சேர விரும்பும் இளைஞர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என விமர்சித்துள்ளார்.
மேலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வு அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர் நியமனப் பணிகளை தொடங்க வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தது முதலே குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், முன்பை விட கூடுதலாக தற்போது காவலர்கள் தேவைப்படுகிறார்கள்.
— Udhay (@Udhaystalin) July 17, 2026
ஆனால் நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை இன்னும் ஓராண்டுக்கு இந்த அரசு தள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
சீருடைப்பணியாளர்…
ஹரக் கட்டா விவகாரத்தில் கைமாறிய பணம்! லஞ்ச வழக்கில் நீதிமன்றில் அம்பலமான திடுக்கிடும் தகவல்கள் IBC Tamil
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan