கோழி மாதிரி பொத்தி பொத்தி வளர்க்கப்படும் உதயநிதி தலைவராக முடியாது- அண்ணாமலை கிண்டல்

bjp annamalai udayanidhi
By Irumporai Sep 04, 2021 12:26 PM GMT
Report

திமுகவில் பொத்தி பொத்தி வளர்க்கப்படுபவர்கள் தலைவர் ஆக முடியாது என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவின் மாநில செயற்குழு கூட்டம் பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு நான்கு பா.ஜ.க எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்ற தொகுதியில் சிறப்பாக பணியாற்றிய வழக்கறிஞர்களுக்கு கேடயம் வழங்கி, வழக்கறிஞர் பிரிவுக்கான தனி சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார்.

கோழி மாதிரி பொத்தி பொத்தி வளர்க்கப்படும் உதயநிதி தலைவராக முடியாது- அண்ணாமலை கிண்டல் | Udayanidhi Cannot Be The Leader Annamalai Tease

அப்போது விழாவில் பேசிய அண்ணாமலை: காலத்தின் கட்டாயம் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தே தீரும். தீயினால் சுடப்பட்டு, சமுதாயத்தால் அசிங்கப்படுத்தப்பட்டு தொடர்ந்து மக்கள் சேவையில் இருப்பவர்களே பெரிய தலைவர்களாக வர முடியும். அடைகாத்த கோழி மாதிரி, பொத்தி பொத்தி வளர்க்கப்படும் உதயநிதியால் தலைவராக முடியாது என கூறினார்.

மேலும்  பாஜக 2024-ல், 400 எம்.பி.களை, பா.ஜ.க. பெறப்போவதை தடுத்து நிறுத்த முடியாது எனக் கூறிய அண்ணாமலை  சுயநலத்திற்காக தலைவர்கள் இருப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தங்களது வேலையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யுங்கள். அதற்கான பதவி உங்களை தேடி வரும் என்று பேசினார்.