மின்னல் வேகத்தில் பணியாற்றுகிறார் முதல்வர்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
படத்தில் வா மின்னல் என்று வருவதுபோல் முதலமைச்சர் மின்னல் வேகத்தில் வேலை செய்து வருகிறார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் அரசியல் வரலாற்றில் முதன் முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 30 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கடைகோடி மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் சென்றடைய வேண்டும் என்ற அம்மாவின் கனவை நிறைவேற்றி உள்ளோம்.
தமிழக முதல்வர் எடப்பாடி அவர்கள் 110 விதியின் கீழ் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி காட்டினார். ஆனால் திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மக்கள் மன்றத்தை புறக்கணித்து சென்றனர்.
விவசாயிகளின் நலன் காக்க 16 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 12 ஆயிரத்து 110 கோடி மதிப்பில் பயிர்க் காப்பீடு கடனை ரத்து செய்தார்.
மின்னல் வேகத்தில் அரசு நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என்றால் அது எடப்பாடியால் தான் முடியும் என்றார்.