உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பதவியேற்பு
உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றார்.
யு.யு.லலித்
யு.யு.லலித் மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் 1957-ம் ஆண்டு பிறந்தார். 1983-ம் ஆண்டில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார்.
நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பில் அரசு வழக்கறிஞராக யு.யு.லலித் செயல்பட்டார். முத்தலாக் வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் அமர்வில் யு.யு.லலித் இடம்பெற்றிருந்தார்.

வழக்கறிஞராக இருந்த இவர் நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், பின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை நீதிபதியாக பதவியேற்பு
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பதவியேற்றார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா நேற்று ஓய்வு பெற்றார். இதனையடுத்து, யு.யு.லலித் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
இன்று காலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவர் 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக பணியாற்றி நவம்பர் 8-ம் தேதி ஓய்வு பெற இருக்கிறார்.