திருமணத்தால் மவுசை இழக்கும் லேடி சூப்பர் : கழட்டிவிட்ட வெற்றி இயக்குனர்
நயன்தாரா பல ஆண்டுகள் காதலித்தவரை திருமணம் செய்து கொண்டது முதல் இரட்டை குழந்தைகளுக்கு தாயானது வரை அனைத்திலும் அவர் நினைத்ததை நடத்தி காட்டி இருக்கிறார். ஆனால் சினிமா வாழ்க்கையை பொருத்தவரையில் அவருக்கு தற்போது கொஞ்சம் சரிவு நிலை என்று கூறப்படுகின்றது
நயன்தாரா
கடந்த சில வருடங்களாகவே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை நடித்து வந்தார் நயன்தாரா.இதனையே தற்போது வரும் நடிகைகளும் பின்பற்றுகின்றனர். இந்த நிலையில் தற்போது நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள கனெக்ட் திரைப்படம்எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் தற்போது வசூலில் பெரும் நஷ்டம் அடைந்திருக்கிறது.
அதனாலேயே இப்போது நயன்தாராவை வைத்து அறம் என்னும் மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் கோபி நயனார் ஆண்ட்ரியா பக்கம் திரும்பி இருக்கிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் நயன்தாராவின் அந்தஸ்தை மேலும் உயர்த்தியது
கழட்டி விட்ட இயக்குநர்
அதனாலேயே இந்த கூட்டணி தற்போது மீண்டும் இணைய இருந்தது. இதுவும் பெண்களை போற்றும் விதமாக இருக்கும் கதை தான். மேலும் இயக்குனர் நயன்தாராவை மனதில் வைத்து தான் இந்த கதையை எழுதி இருக்கிறார். ஆனால் இப்போது நயன்தாராவின் மார்க்கெட் தத்தளித்து வருவதால் அவரை விட்டுவிட்டு ஆண்ட்ரியாவை தேர்ந்தெடுத்து விட்டாராம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.