ஒரு ரைடுக்கு ரூ.24 லட்சம் பில் போட்ட ஊபர் நிறுவனம் - அதிர்ச்சி பின்னணி

United States of America
By Sumathi Jul 15, 2023 07:29 AM GMT
Report

ஒரு பயணத்திற்கு ஊபர் ரூ.24 லட்சம் பில் போட்ட சம்பவம் பகீர் கிளப்பியுள்ளது.

ஒரு ரைடு தான்  

அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் டோக்ளஸ் ஓர்டோனஸ் மற்றும் டொமினிக்யூ ஆதம்ஸ் தம்பதி. இவர்கள் அண்மையில் ஊபர் டாக்சியில் பயணம் செய்துள்ளனர். ஒரு ரைடிற்கு இவர்களுக்கு 29994 அமெரிக்க டாலர்கள் (24 லட்சம்) கட்டணமாக விதிக்கப்பட்டது.

ஒரு ரைடுக்கு ரூ.24 லட்சம் பில் போட்ட ஊபர் நிறுவனம் - அதிர்ச்சி பின்னணி | Uber Charges Couple Rs 24 Lakh For A Single Ride

ஆனால், அவர்கள் 55 டாலர்கள்(ரூ.4,500) வரையிலும் கட்டணம் வரும் என எண்ணிக் கொண்டிருந்தனர். தொடர்ந்து இதுகுறித்து டோக்ளஸ் தனது ட்விட்டர் பதிவில், “கோஸ்டாரிக்கா நாட்டில் ஊபர் நிறுவனம் என்னிடம் 29,990 அமெரிக்க டாலர்களை வசூலித்து விட்டது.

 லட்சத்தில் பில்

அமெரிக்க மதிப்பில் 54 டாலர்கள் கட்டணம் இறுதியான நிலையில் கோஸ்டாரிக்கா கரன்சியின்படி 29,990 வரும். அதை அமெரிக்க டாலராகவே வசூல் செய்து விட்டனர். கரன்சியை அவர்கள் மாற்றம் செய்யவில்லை. எங்கள் புகாரை ஊபர் நிறுவனம் கண்டு கொள்ளவில்லை.

ஒரு ரைடுக்கு ரூ.24 லட்சம் பில் போட்ட ஊபர் நிறுவனம் - அதிர்ச்சி பின்னணி | Uber Charges Couple Rs 24 Lakh For A Single Ride

எங்களுடைய 5ஆம் ஆண்டு திருமண தினத்தை கொண்டாடுகின்ற இந்த சமயத்தில் கௌதமாலா பகுதியில் என் அக்கவுண்டில் மைனஸ் பேலன்ஸ் உடன் நின்று கொண்டிருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதன்பின், ஊபர் நிறுவனம், தவறு நடந்திருப்பதை ஒப்புக்கொண்டது.

வங்கி பரிவர்த்தனையில் தவறு நிகழ்ந்த நிலையில் கரன்சியின் மதிப்பு மாற்றப்படவில்லை என உறுதி செய்தது. அதனையடுத்து, தொடர்புடைய வங்கி மற்றும் ஊபர் நிறுவனம் இடையே குழப்பங்களுடன் நடந்த தகவல் பரிமாற்றம் காரணமாக 4 நாட்களுக்கு பிறகே தங்கள் பணம் திரும்பக் கிடைத்ததாக டோக்ளஸ் தெரிவித்துள்ளார்.