ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா உடல்நலக்குறைவால் காலமானார்!
By Swetha Subash
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சயத் அல் நகியான் (73) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
73 வயதான ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சயத் அல் நகியான் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

இதனை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் 40 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் எனவும், அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலகங்கள் 3 நாட்கள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் 2004-ம் ஆண்டு முதல் முக்கிய அரபு அமீரக அதிபராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.