ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு சைவ விருந்து கொடுத்த அமீரக அதிபர்..!
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சைவ விருந்து அளித்தார் அந்நாட்டு அதிபர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடி, தனது இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு, அரசு முறை பயணமாக நேற்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபி சென்றடைந்தார்.
அபுதாபி விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வரவேற்றார்.
இந்நிலையில், பிரதமரின் வருகையை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு அபுதாபி அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சிறப்பு சைவ உணவு வகைகளை தயாரித்துள்ளார்.
சைவ உணவு விருந்து
கஸ்ர்-அல்-வதன் ஜனாதிபதி மாளிகையில் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான், மோடிக்கு விருந்து அளித்தார். விருந்தில் முதலில், கோதுமை, பேரீச்சம்பழ சாலட் உடன் காய்கறிகளை தொடர்ந்து, மசாலா சாஸில் வறுக்கப்பட்ட காய்கறிகள் பறிமாறப்பட்டது.
கறுப்புப் பருப்பும், காலிஃபிளவர், கேரட் தந்தூரி ஆகியவையும் வழங்கப்பட்டன. இந்நிலையில், பிரதமரின் இந்த பயணத்தில் இரு நாடுகளிடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது.