ஒரே ஓவரில் 6 விக்கெட் - இளம் வீரர்களுக்கு சவால் விடும் 16 வயது சிறுவன்
ஐக்கிய அரபு அமீரகத்தின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஹர்ஷித் சேத் ஒரு ஓவரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
துபாயில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் அஜ்மான் கிரிக்கெட் கவுன்சில் நடத்திய கர்வான் குளோபல் 20 ஓவர் கிரிக்கெட் கிளப் போட்டியில் துபாய் கிரிக்கெட் கவுன்சில் ஸ்டார்லெட்ஸ் அணிக்காக ஹர்ஷித் சேத் என்ற 16 வயது இந்திய வம்சாவளி சிறுவன் விளையாடி வருகிறான்.
இவன் பாகிஸ்தான் அணியான ஹைதராபாத் ஹாக்ஸ் அகாடமி ஆர்சிஜிக்கு எதிராக ஒரு ஓவரில் ஆறு பந்துகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியில் மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் எதிரணியை 44 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்ய முக்கிய பங்காற்றினார்.
டெல்லியில் பிறந்த சேத் துபாய் ஜெம்ஸ் மாடர்ன் அகாடமியில் 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஐக்கிய அரபு அமீரக அணிக்காக விளையாடி வருகிறார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான அவர், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் ஐக்கிய அரபு அமீரக அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கே சவால் விடும் வகையில் அவரது பந்துவீச்சு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரச்சினை என்றால் வெறியேறு! அர்ச்சுனாவின் கருத்தால் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆவேசமடைந்த பிரதிநிதிகள்! IBC Tamil
ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! Manithan