டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பாராட்டு விழா - ரூ.5 கோடி பரிசு வழங்கிய பிசிசிஐ...!

Cricket Indian Cricket Team Board of Control for Cricket in India
By Nandhini 1 மாதம் முன்
Report

டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பாராட்டு விழா - ரூ.5 கோடி பரிசு வழங்கிய பிசிசிஐ...!

வெற்றி கோப்பையுடன் தாயகம் திரும்பிய வீர மங்கைகள்

19 வயதுக்குட்பட்ட பெண்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து உலக கோப்பையை கைப்பற்றியது. இதனையடுத்து வெற்றி பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் உட்பட சினிமாத்துறையினர், ரசிகர்கள் பலர் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நேற்று வெற்றி கோப்பையுடன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் டெல்லியில் உள்ள ஐஜிஐ விமான நிலையத்திற்கு இந்தியா வந்தடைந்தனர். அப்போது அவர்களுக்கு இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இந்தியாவிற்கு வந்த அடைந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரை சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அணியைப் பாராட்டினர்.

u19-womens-t20-world-cup-cricket

5 கோடி ரூபாய் பரிசுத்தொகை

இதனையடுத்து நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சபாலி வெர்மா தலைமையிலான இந்திய அணியை அவர்கள் பாராட்டி உரை நிகழ்த்தினர்.

இதனையடுத்து, பிசிசிஐ சார்பில் இந்திய ஜூனியர் மகளிர் அணிக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.  


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.