சிரிக்க முடியாது...கருவிழியை அசைக்க முடியாது: விநோத நோயுடன் போராடும் இளம்பெண்

tylaclement Moebiussyndrome
By Petchi Avudaiappan Jan 11, 2022 07:38 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

நியூசிலாந்து நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விநோத நோயுடன் போராடி வரும் சம்பவம் காண்போரை கண்கலங்க செய்துள்ளது. 

நியூசிலாந்தை சேர்ந்த 24 வயதான இளம்பெண் டைலா கிளெமென்ட் என்பவர் பிறப்பிலிருந்தே மோபியஸ் என்ற நோயால் (Moebius syndrome) பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயின் காரணமாக அவரால் சிரிக்கவோ அல்லது அவரது கண்களின் கருவிழிகளை அசைக்கவோ முடியாது.  

கண் அசைவுகள் மற்றும் முகபாவனைகளை கட்டுப்படுத்தும் முக நரம்புகளின் வளர்ச்சியடையாததன் விளைவால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக கூறும் மருத்துவ நிபுணர்கள் இந்த நிலை பேச்சு, மெல்லுதல் மற்றும் விழுங்குதல் உள்ளிட்டவற்றுக்கு பொறுப்பான நரம்புகளையும் சில நேரங்களில் பாதிக்கலாம் என தெரிவிக்கின்றனர். 

அதேசமயம் தன்னை பற்றிய விமர்சனங்களை கடந்து வந்து தான் நினைத்ததை  டைலா கிளெமென்ட்சாதித்தும் உள்ளார் . 24 வயதான அவர் இன்றைய நிலவரப்படி பாராலிம்பிக்கில் சாதனை படைத்தவர் ஆவார். மேலும் இன்ஸ்டாவில் மிகவும் பிரபலமாகவும் இருந்து வருகிறார்.

இந்த நோய் பாதிப்பால் அவரது முக தசைகள் செயலிழந்துள்ளன. மேலும் இவரால் தனது முகபாவனையையும் மாற்ற முடியாது. இந்த பாதிப்புக்கு இதுவரை முழுமையான சிகிச்சை எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. முழுசிகிச்சை முறைகள் எதுவும் இல்லை என்றாலும் டைலா கிளெமென்ட்டிற்கு ஓரளவு சில சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.