நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர்கள் உயிரழப்பு
மதுரை அருகே உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கண்ணனூர் கலுங்குபட்டி பிரிவில் இருசக்கர வாகனம் மீது தனியார் நிறுவனத்தின் வேன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மேலப் பெருமாள்பட்டியைச் சேர்ந்த சேவாக் மற்றும் ஹரிஸ் கண்ணன் என்ற இரு வாலிபர்கள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவமறிந்து விரைந்து வந்த செக்காணூரணி போலிசார் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த சாலை விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.