தொலைக்காட்சி விழுந்ததில் இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு

Death
By Thahir Oct 15, 2022 05:38 AM GMT
Report

ராணிப்பேட்டை அருகே தொலைக்காட்சி விழுந்ததில் இரண்டு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

குழந்தை உயிரிழப்பு 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சதாம். நேற்று இரவு வீட்டிற்கு வெளியே குடும்பத்துடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

வீட்டிற்குள் விளையாடிக் கொண்டு இருந்த அவரது இரண்டு வயது குழந்தை அங்கு தொலைக்காட்சி பெட்டி வைக்கப்பட்டு இருந்த மேசையின் அருகே சென்று அதில் எதோ எடுக்க முயன்றுள்ளார்.

தொலைக்காட்சி விழுந்ததில் இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு | Two Year Old Child Dies After Television Falls

சதாம் வீட்டில் இருந்தது எடை அதிகமான பழைய ரக தொலைக்காட்சியாக இருந்தது. இதனால் சிறுவன் மேஜையை ஆட்டிய பொழுது குழந்தையின் மேல் தொலைக்காட்சி விழுந்தது. தொலைக்காட்சி பெட்டியின் எடை அதிகமாக இருந்ததால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. 

குழந்தையின் சத்தம் மற்றும் தொலைக்காட்சி விழுந்த சத்தம் இரண்டையும் கேட்டு வீட்டிற்குள் சென்ற சதாம் மற்றும் அவரது குடும்பத்தினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

மருத்துவமனையில் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.