ஒரே இளைஞரை காதலித்த 2 பெண்கள் - காதலன் எடுத்த விபரீத முடிவு
கர்நாடகாவில் ஒரே இளைஞரை இரண்டு பெண்கள் காதலித்ததால் நிலையில், அந்த இளைஞர் எடுத்த விபரீத முடிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே ராணிபுரா பகுதியை சேர்ந்த லியோட் டிஜோசா என்ற 29 வயது இளைஞர் அதே பகுதியை சேர்ந்த அஸ்விதா என்ற பெண்ணை கடந்த 8 வருடமாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே 2 மாதங்களுக்கு முன்பு இவர்களது காதலுக்கு வில்லியாக குறுக்கோ வந்த மற்றொரு பெண்ணான டாக்லின் என்பவர் லியோட் டிஜஜோசா காதலிப்பது தெரிந்தும் அவரை ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார்.
இந்த விவகாரம் லியோட் டிஜோசா - அஸ்விதாவுக்கும் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. இதனால் 8 வருட காதலை இழந்து விடுவோமோ என்ற பயம் அஸ்விதாவுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே நேற்று முன்தினம் மாலை சோமேஸ்வரா கடற்கரைப்பகுதியில் லியோட் டிசோசா அவரது காதலி அஸ்விதா மற்றும் ஜாக்லின் ஆகிய மூவரும் பேசிக் கொண்டிருந்தனர். காதல் விவகாரத்தில் மாட்டிக்கொண்ட லியோட் டிசோசா யார் பக்கம் பேசுவது என்று புரியாமல் திக்கி தவித்துள்ளார்.
அப்போது அஸ்விதா திடீரென அரபிக் கடலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனை பார்த்ததும் பதறி போன காதலன் லியோட் டிஜோசா கடலில் குதித்து அஸ்விதாவை உயிருடன் மீட்டார். கடலில் இருந்து கரை வந்தபோது இருவரும் மயக்க நிலையில் இருந்தனர். பின்னர் டாக்லின் இருவரையும் அங்கிருந்த நபர்களின் உதவியோடு தேரளகட்டே தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் வழியிலேயே லீயோட் டிஜோசா உயிரிழந்தார் .
இந்த சம்பவம் தொடர்பாக உல்லால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.