பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் - மேலும் 2 சாட்சிகள் பரபரப்பு வாக்குமூலம்!
தர்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட சர்ச்சையில் 2 சாட்சிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தர்மஸ்தலா விவகாரம்
கர்நாடகா, தட்சின கன்னடாவில் தர்மஸ்தலா உள்ளது. இங்குள்ள மஞ்சுநாதர் கோயில் மிகவும் பிரபலம். இந்நிலையில் இக்கோயிலின் முன்னாள் தூய்மைப் பணியாளர் பரபரப்பு புகார் மனு ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார்.
அதில், பல பெண்களை பள்ளி சீருடையிலேயே புதைத்து இருக்கிறேன். பெண்களின் உடலில் பாலியல் வன்முறைக்கான காயங்களும், சில நேரம் ஆசிட் தழும்புகளும் காணப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து பெல்தங்கடி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
புதிய திருப்பம்
அப்போது, சில எலும்புகளையும் கொண்டு வந்திருந்தார். இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் முன்னிலையில் முன்னாள் ஊழியர் சுட்டிக்காட்டிய 16 இடங்களில் நேத்ராவதி ஆற்றங்கரையில் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் சில குழிகளில் பெண்களின் எலும்புக் கூடுகளும், சேலையும் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் தான் திடீர் திருப்பமாக இருவர் தானாக முன்வந்து வேறு ஒரு இடத்தில் உடல்களைப் புதைக்கப்படுவதை தாங்கள் பார்த்தாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அவர்கள் சொன்ன இடத்தில் அடுத்தகட்டச் சோதனையை ஆரம்பிக்கச் சிறப்பு விசாரணைக்குழு திட்டமிட்டு வருகிறது.