Viral Video: இரும்புக் கூடு கட்டி 5 சிறுவர்களை அழைத்துச் சென்ற நபர்
கர்நாடகாவின் மைசூரு- நஞ்சன்கூடு பிரதான சாலையில் நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் தனியாக இரும்புக்கூடு அமைத்து ஐந்து சிறுவர்களை அழைத்து சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சமூக வலைத்தளத்தில் பரவும் வீடியோவில் TVS XL ரக இருசக்கர வாகனத்தின் பின்புறம் இரும்புகூடு ஒன்று அமைக்கப்பட்டு அதில் நெருக்கமாக ஐந்து சிறுவர்கள் அமரவைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வாகனத்தை ஓட்டி செல்லும் நபருக்கு முன்னாலும் மற்றொரு சிறுவன் அமர்ந்திருக்கிறான்.
குறித்த வீடியோ காட்சிகள் வைரலாக இது ஆபத்தான பயணம் என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்திய மோட்டார் வாகனச்சட்டத்தின் படி இருசக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி உண்டு, குழந்தைகளை ஆபத்தான முறையில் ஏற்றிச்சென்றது தண்டனைக்குரியது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இலங்கையில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த வெடிபொருள்! ஈஸ்டர் வழக்கில் ஜமைக்காவில் இருந்து வழங்கப்பட்ட சாட்சியம் IBC Tamil