மீண்டும் சர்ச்சை; ஒரே அறையில் இரண்டு வெஸ்டர்ன் கழிவறைகள்
காஞ்சிபுரத்தில் ஒரே அறையில் இரண்டு வெஸ்டர்ன் கழிவறைகள் அமைக்கப்பட்ட சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே அறையில் இரண்டு வெஸ்டர்ன்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையில் அருகருகே டாய்லட் அமைக்கப்பட்டு சர்ச்சையான நிலையில், மீண்டும் காஞ்சிபுரத்தில் ஒரே அறையில் வெஸ்டர்ன் டாய்லெட் அமைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா செயல்பட்டு வருகிறது.
சிப்காட் திட்ட அலுவலகத்திற்கு ரூபாய் 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் கானொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனை அடுத்து ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகையுடன் சிப்காட் திட்ட அலுவலர் கவிதா, பொறியாளர் கார்த்திக் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்து அலுவலர்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தனர்.
ஆனால் புதிதாக கட்டப்பட்ட இந்த திட்ட அலுவலகத்தில் உள்ள கழிவறையில் ஒரே அறையில் இரண்டு பேர் அருகருகே அமரும் வகையில் டாய்லெட் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி பொறியாளருக்கு தெரியுமா என்பதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.